பாடசாலை அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆராய்ச்சி பணிகளுக்கு அல்லது கருத்திட்டட நடவடிக்கைகளுக்கு தகவல்களைப் பெறுவது எப்படி?
- அந்த தகவல்களை திணைக்களத்தின் இணையத்தளத்தில் அல்லது
- வார நாட்களில் மு.ப 9.00 மணிமுதல் பி.ப 4.00 மணிவரை திணைக்களத்தில் தேவையான தகவல்களைச் சேகரித்துக்கொள்ள முடியும்
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத்தினால் வெளியிடப்படுகின்ற சிறு புத்தகங்களையும் சுவரொட்டிகளையும் பெற்றுக்கொள்ளுவது எப்படி?
சிறு புத்தகங்களும் சுவரொட்டிகளும் திணைக்கள நூலகத்தில் கிடைக்கின்றன.
கரையோர வலயங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறிய அபிவிருத்திகளைப்பற்றி யாருக்கு அறிவிப்பது?
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள பிரதேச அலுவலகங்களுக்கு அல்லது திணைக்களத்தின் கரையோர வளங்கள் முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்க முடியும்.
பவளப் பாறைகள் மற்றும் உயிர் பல்வகைமை பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி?
பவளப் பாறைகள் பற்றிய தகவல்களை கரையோர வள முகாமைத்துவ பிரிவிலிந்து பெற்றுக்கொள்ள முடியும்.
கடல் ஆமைகளைப் பற்றிய தகவல்களைப் பெறுவது எப்படி?
கடல் ஆமைகள் பற்றிய தகவல்களை கரையோர வள முகாமைத்துவ பிரிவிலிந்து பெற்றுக்கொள்ள முடியும்.
கண்டல் தாவரங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவது எப்படி?
கண்டல் தாவரங்கள் பற்றிய தகவல்களை கரையோர வள முகாமைத்துவ பிரிவிலிந்து பெற்றுக்கொள்ள முடியும்.
கடல் மணலை எடுத்துச் செல்லுவதற்கு/ போக்குவரத்து செய்வதற்கு அனுமதி பெறுவது எப்படி?
எழுத்துமூல கோரிக்கையொன்றைச் சமர்ப்பித்து கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத்திலிருந்து பொது வேலைகளுக்காக 02 கியூப் (ஆகக்கூடிய வரையறை மற்றும் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து) கடல் மணல் எடுப்பதற்கு அனுமதி பெற முடியும். கடல் மணலைக் கொண்டுசெல்லுவது தொடர்பில் புவிச்சரிதவியல் ஆய்வுகள் மற்றும் சுரங்க பணியகத்திலிருந்து (GSMB) அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
கரையோர வலயத்தில் அபிவிருத்தி நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு அனுமதி பெறும் நடைமுறை யாது மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
இந்த பக்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
சுனாமி நிலைபற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் நாம் தகவல் பெற முடியுமா?
காலநிலை அவதான திணைக்களத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடலரிப்பு நிலைபற்றி அறிவிக்க வேண்டிய அதிகாரி யார்?
- திணைக்கள தலைமை அலுவலகம் - பிரதான பொறியியலாளர் (கரையோர பணிகள்)
- திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்கள் - பிரதேச பொறியியலாளர்
இந்த திணைக்களத்தின் பிரதேச அலுவலகம் எங்கே அமைந்துள்ளது? இதன் தலைவர் யார்? பிராந்திய அலுவலகங்களின் தொடர்பு விபரங்கள் யாவை?
இந்த பக்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது.