கரையோர ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு பிரிவு
கரையோர கண்காணிப்பு, ஆராய்ச்சி, புலனாய்வு மற்றும் வடிவமைப்பு என்பவை கரையோர ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு பிரிவின் பணிகளாகும். சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் பிரச்சினைகளையும் போக்கையும் அடையாளம் காண்பதற்காக நாட்டின் கரையோர வலயம் ஆய்வுசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அடையாளம் கண்ட பிரச்சினைகளின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் அதற்கான தீர்வைக் கண்டறிவதற்கு செயலாற்றினர். அபிவிருத்தி கருத்திட்டங்களையும் கரையோர நிலைப்பாட்டையும் வடிவமைப்பதற்காக நீரியக்க விசை மற்றும் நிலப்பரிணாம அமைப்பியல் என்பவற்றின் பகுப்பாய்வுடன் கரையோர புலனாய்வு செயற்படுத்தப்பட்டது. மிகவும் யதார்த்தமான தீர்வுகளுக்காக பௌதிக ரீதியாக அல்லது எண்ணியல் ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கூர் உணர்வுமிக்க கரையோர பிராந்தியங்கள் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டன. கரையோர அனர்த்தங்கள் அதிகரித்ததை அடுத்து, கரையோர இடர்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன் தயார்நிலை, மாற்றி அமைத்தல் மற்றும் தணித்தல் ஆகிய நடவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. வான்வெளியியலுடனும் தற்காலிகமாகவும் விநியோகிக்கப்பட்ட கரையோர தரவுகள் மற்றும் தகவல்கள் என்பவற்றுடன் கரையோர தகவல் முறைமை தயாரிக்கப்பட்டு சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ளுவதற்காக கரையோர வலயத்தில் செயலூக்கத்துடன் செயலாற்றுகின்ற அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்களிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டது. நிகழ்கால தகவல்களுடன் கரையோர இணையத்தளம் விருத்திசெய்யப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
கரையோர பணிகள் பிரிவு
கரையும் கரையோர சூழலும் அடிப்படை வளங்களாக இருக்கின்றன. நாட்டின் உட்புறத்திலிருந்து கரையோர வலயம் வேறுபட்டதாக இருக்கின்றது. சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக கரையோர வளங்களை மேம்படுத்துவதற்காக இயற்கை சூழலியல் நடைமுறைகளை மிகக் கவனமாகக் கையாண்டு கரையோரமும் கரையோர சூழலும் முகாமைப்படுத்தப்பட வேண்டும். கடற்கரையோர முகாமைத்துவ கருத்திட்டங்களையும் நடைமுறையில் உள்ள கரையோர பாதுகாப்பு கட்டமைப்பு பராமரிப்பையும் அமுல்படுத்தும் பொறுப்பு கரையோர பணிகள் பிரிவைச் சேர்ந்ததாகும். மேலும் கரையோரமும் நடைமுறையில் உள்ள கரையோர பாதுகாப்பு கட்டமைப்பும் தேசிய தரத்திற்கு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். திணைக்களத்தின் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக பிரதேச கரையோர பொறியியலாளர்கள் ஊடாக பிராந்திய சமூகமளிப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
கரையோர வளங்கள் முகாமைத்துவ பிரிவு
கரையோர வளங்கள் முகாமைத்துவ பிரிவு நிர்வாகம் மற்றும் கரையோர வலய பாதுகாப்பு குறிப்பாக கரையோர வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளுகின்ற அரசாங்க மற்றும் தனியார் துறை அபிவிருத்தி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் பொறுப்பாக இருக்கிறது. அபிவிருத்தி ஒழுங்குமுறைப்படுத்தல் முறைமை, வளங்களை நிலைபேறாகப் பயன்படுத்துவதற்கும் சூழலியல் தாக்கங்களை தணிப்பதற்கும் கரையோர வலயத்திற்குள் அபிவிருத்தி நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதை அமுல்படுத்துகிறது. மேலும் இந்த பிரிவு ஏனைய தகுந்த முகவர் நிலையங்களுடனும் சமூகத்துடனும் ஒருங்கிணைந்து விசேட பிரதேச முகாமைத்துவ திட்டத்தை வடிவமைப்பதற்கும் அமுல்படுத்துவதற்கும் பொறுப்பு வகிக்கிறது. திட்டங்களில் பயனர்களுக்காக முரண்பாடுகள், சமூக, கலாசார, பொருளாதார மற்றும் சூழலியல் பிரச்சினைகள் என்பவற்றிற்குத் தீர்வாக மூலோபாயங்களும் கொள்கைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும் கரையோர சூழலின் கூர் உணர்வுபற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டப்படுகிறது.
நிதி பிரிவு
நிதி பிரிவு திணைக்களத்தின் முழுமையான நிதி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பாக இருக்pறது. இந்த பிரிவின் பிரதான செயற்பாடுகள் வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுக்குள் திணைக்கள நடவடிக்கைகளுக்கு நிpயிடல், சரியான தொகுப்பில் கணக்குகளைப் பராமரித்தல், தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக உயர் அதிகாரிகளுக்கு சரியான நிதிசார் தகவல்களை வழங்குதல், திறைசேரியுடனும் அமைச்சுடனும் தொடர்பாடலை மேற்கொள்ளுதல் என்பவையாகும். அத்துடன் திணைக்களத்தின் அனைத்து விலை மனுக்கோரல் நடவடிக்கைகளுக்கான பொறுப்பையும் வகிக்கிறது.
நிர்வாக பிரிவு
திணைக்களத்தின் இலக்குகளை அடைவதற்காக மனித வள முகாமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அடையாளம் காணப்பட்ட துறைகளில் பணியாட் தொகுதியினரைச் சேர்த்து அவர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் ஆளணி இடைவெளிகளை நிரப்புவதற்காக பணியாட் தொகுதியினர் போதுமாளவு இருப்பதையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளுவதற்கு அவர்களுக்குள்ள ஆற்றலை மதிப்பீடு செய்வதையும் காலத்திற்குக் காலம் மேற்கொள்ள வேண்டும். நிர்வாக பிரிவு திணைக்களத்தின் மனித வள முகாமைத்துவத்திற்குப் பொறுப்பாக இருக்கிறது. மேற்குறிப்பிட்ட விடயங்களில் கருமமாற்றுவது மட்டுமல்ல, பதவி உயர்வுகள், இடமாற்றம், பணியாட் தொகுதி அங்கத்தினர்களின் ஒழுக்கம், பணியாட் தொகுதியினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு வேலைசெய்யும் சூழலை வசதியாக வைத்திருத்தல் என்பனவும் இப்பிரிவின் பொறுப்பாகும்.
கணிகாணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு
திணைக்களத்தின் வருடாந்த திட்டத்திற்கு அமைவாக தொடர்ச்சியான சேகரிப்பு, செயலாக்கம், பொருள்கோடல் மற்றும் நடவடிக்கைகளை பரவச் செய்தல் என்பவற்றுடனான வருடாந்த நிகழ்ச்சித்திட்டதிற்கு அமைவாக இலக்குகளை அடைவதற்காக தீர்மானம் மேற்கொள்ளுவதற்கு தரவுகள் கிடைப்பதை உறுதிசெய்வது கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பாகும். அத்துடன் செயற்றிட்டங்களைத் தயாரித்தல், வருடாந்த நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றுடன்; விலைமனு கோரல் திட்டம், மாதாந்த முன்னேற்ற அறிக்கை, வருடாந்த அறிக்கை மற்றும் வரவுசெலவு திட்ட திணைக்களத்திற்கும் வரிசை அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட ஏனைய ஆவணங்களையும் வழங்குகிறது.
Legal Division
Providing legal advice and doing related legal work with the legal provisions of the Coastal Conservation Coastal Resource Management Act. appearing in court on behalf of the department in necessary cases, coordinating with the Attorney General's Department. Coordinating with other Stake Holder institutions regarding legal matters and aware the police and other institutions about the legal provisions of the Coastal Conservation Act.