+94 11 24 49 754
+94 11 243 8005

gov

2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் சட்டத்திற்கு அமைவாக

இது பணிப்பாணைக்கு உட்படாவிட்டாலும் தகவல்களுக்கான கோரிக்கையை தகவலறியும் படிவ இலக்கம் 01இல் குறிக்கப்பட்டுள்ளவாறு பூர்த்திசெய்து பின்வரும் தகவல் உத்தியோகத்தருக்கு கையளிக்க வேண்டும்.

தகவல் உத்தியோகத்தர்

  • திருமதி கே.பி.ஏ. பெர்னாண்டோ,
    சட்ட உத்தியோகத்தர்,
  • கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம்
  • +94 112 330 460
  • kpafernando[at]yahoo.com

 

  • வாய்மூலமாக அல்லது எழுத்து வடிவத்தில் தகவலுக்கான கோரிக்கையை முன்வைத்ததன் பின்னர் தகவல் உத்தியோகத்தரிடமிருந்து எழுத்துமூல ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • தகவல் வழங்கப்படுமா இல்லையா என்பது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பெரும்பாலும் 14 நாட்களுக்குள் தரப்படும்.
  • தகவல் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டால் தகவல் உத்தியோகத்தர் தகவல் கோரும் பிரசைக்கு தகவலறியும் ஆணைக்குழுவினால் கட்டண அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தும்படி கோரிக்கை விடுப்பார். கட்டணம் செலுத்தி பெறும் தகவலாக இருந்தால், கட்டணம் செலுத்தி 14 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படும். கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை எனத் தீர்மானிக்கப்பட்டால் அத்தகவல் 14 நாட்களுக்குள் வங்கப்படும்.
  • கட்டணம் செலுத்திய பின்னர் 14 நாட்களுக்குள் தகவலை வழங்க முடியாமற்போனால் அதுபற்றி தகவல் கோரிய பிரசைக்கு அறிவிக்கப்பட்டு, தகவல் வழங்குவதற்கு ஆகக்கூடியது 21 நாட்களுக்கு கால நீடிப்பு கோரப்படும். கால நீடிப்புக்கான காரணம் தகவல் கோரும் பிரசைக்கு அறிவிக்கப்படும்.
  • கோரிக்கை ஒரு பிரசையின் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட சுதந்திரம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் தகவல் உத்தியோகததர் அந்த கோரிக்கைக்கு 48 மணித்தியாலங்களுக்குள் பதில் அளிப்பார்.
  • பின்வரும் சந்தர்ப்பங்களில் மேன்முறையீடு செய்ய முடியும்:
    • தகவல் பெறுவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தகவல் உத்தியோகத்தர் மறுத்தல்
    • 5ஆம் பிரிவின் கீழ் அத்தகைய தகவல் விலக்களிக்ப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அந்த தகவலை வழங்குவதற்கு தகவல் உத்தியோகத்தர் மறுத்தல்
    • சட்டத்தில் குறிப்பிடப்பட்ட காலவரையறைக்கு இணங்கியொழுகாமை
    • தகவல் உத்தியோகத்தர் பூரணமற்ற, தவறாக வழிநடத்துகிற அல்லது பிழையான தகவலை வழங்குதல்
    • தகவல் உத்தியோகத்தர் மிகையாக கட்டணத்தை அறவிடல்
    • தகவல் உத்தியோகத்தர் படிவத்தில் கேட்கப்பட்ட தகவலை வழங்க மறுத்தல்
    • பிரசை கோருகின்ற தகவல் சிதைந்துள்ளது, அழிந்துள்ளது அல்லது காணாமற் போயுள்ளது என்ற நியாயமான காரணங்களின் அடிப்படையில் அவருக்கு அந்த தகவலைப் பெற முடியாதிருத்தல்

பதவியளிக்கப்பட்டுள்ள அதிகாரி,

  • திரு பொறி. ஆர்.ஏ.எஸ். ரணவக்க,
    பணிப்பாளர் நாயகம்,
  • கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம்
  • +94 112 449 197

 

  • இந்த அறிவித்தலில் S.6இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்கும்போது பதவியளிக்கப்பட்டுள்ள அதிகாரிக்கு தகவலறியும் படிவம் 10ஐ பூர்த்திசெய்து கையளிக்க வேண்டும். தகவலறியும் படிவம் 10 கட்டாயமானதல்ல. தகவல் கோரும் பிரசை தனது மேன்முறையீட்டை நியாயப்படுத்தி தகவலறியும் படிவம் 10இல் குறிக்கப்பட்டுள்ள அடிப்படை தகவல்களுடன் கடிதமூலம் மேன்முறையீட்டை முன்வைக்க முடியும்.