+94 11 24 49 754
+94 11 243 8005

gov

கடலரிப்பு எதிரான போராட்டம் இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கிச் செல்லுகின்றது. அத்துடன் 1963ஆம் ஆண்டுக்கு முன்னர் கரையோர பாதுகாப்பு பணிகள் பல திணைக்களங்களால் மேற்கொள்ளப்பட்டன. கடலரிப்பை தடுப்பதற்கு அனைத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறையொன்று தேவை என்பதை உணர்ந்துகொண்ட அரசாங்கம் 1963ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக ஆணைக்குழுவில் கரையோர பாதுகாப்பு பொறியியல் அலகொன்றை ஸ்தாபிப்பதற்கு வழிகாட்டியது. 1978ஆம் ஆண்டு கரையோர பாதுகாப்பு பொறியியல் அலகு கடற்றொழில் மற்றும் நீரகவள மூலகங்கள் அமைச்சுக்கு (MFAR) மாற்றப்பட்டதுடன் கரையோர பாதுகாப்பு பிரிவாக செயற்பட்டது.

1981ஆம் ஆண்டு, 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கரையோர பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டதுடன் தரம் 1 பொறியியல் திணைக்கள அந்தஸ்தும் வழங்கப்பட்டது. அதற்கு அமைவாக 1981ஆம் ஆண்டு கரையோர பாதுகாப்பு பிரிவு கரையோர பாதுகாப்பு திணைக்களமாகத் (CCD) தரமுயர்த்தப்பட்டது. கரையோர பாதுகாப்பு கரையோர ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவம் என்பவற்றிற்கு திணைக்களத்தில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. கரையோர வலயத்தின் முகாமைத்துவம் கரையோர பாதுகாப்பு பணிப்பாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் திணைக்கள தலைவராகவும் இருக்கிறார். 1988ஆம் ஆண்டின் 64ஆம் இலக்க கரையோர பாதுகாப்பு (திருத்தச்சட்டம்) என்ற வகையில் 1988ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு யூலை மாதம் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டதை அடுத்து திணைக்களம் மேலும் தரமுயர்த்தப்பட்டதுடன் 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது.

கரையோர பாதுகாப்பு சட்டத்திற்கு கரையோர வலய ஆய்வும் கரையோர வலய முகாமைத்துவ திட்டமும் (CZMP) தேவைப்பட்டது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட கரையோர வலய ஆய்வும் கரையோர வலய முகாமைத்துவ திட்டமும் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கரையோர வலய முகாமைத்துவ திட்டம் 1990 என செயற்படுத்தப்பட்டது. 1992ஆம் ஆண்டு இலங்கையின் கரையோர வளங்கள் முகாமைத்துவத்திற்கான வழிகாட்டலை வழங்கிய "கரையோரம் 2000" இலங்கையின் பிராந்தியங்களுக்கான வள முகாமைத்துவ மூலோபாயம் தயாரிக்கப்பட்டது. மீள்நோக்கப்பட்ட கரையோர வலய ஆய்வும் கரையோர வலய முகாமைத்துவ திட்டமும் (CZMP) 1997ஆம் ஆண்டிலும் 2004ஆம் ஆண்டிலும் அமுலாக்கப்பட்டது. கரையோர வலய ஆய்வும் கரையோர வலய முகாமைத்துவ திட்டமும் (CZMP) கடைசியாக 2018ஆம் ஆண்டு மீள்நோக்கப்பட்டு தற்பொழுது அமுலாக்கப்படுகிறது.

நோக்கம்

கரையோர பிராந்தியங்கள் இலங்கையில் வளர்ந்து வருகின்ற மற்றும் பெரும் சனத் தொகைக்கு இல்லமாக இருக்கின்றது. உயர் செறிவுள்ள சனத்தொகை இந்த கரையோர வளங்களிலிருந்து குறிப்பாக கடற்றொழில், சுற்றுலா மற்றும் கடல்சார்ந்த நடவடிக்கைகள் போன்றவற்றிலிருந்து அநேக பொருளாதார நன்மைகளை உற்பத்திசெய்துள்ளது. மேலும் பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாக போக்குவரத்து தொடர்புகள் மேம்படுத்தப்பட்டன, கைத்தொழில் மற்றும் நகர நிலையங்கள் அபிவிருத்தியடைந்தன, கரையோர வலயங்களின் பௌதிகத் தன்மை சீர்படுத்தப்பட்டன. இறுதியில் அதிகரித்த நன்மைகள் காரணமாக தேசிய கரையோர சூழலியலின் தரம் தாழ்ந்தது. அதன் காரணமாக, கரையோர வலயத்தின் பொறியியலும் முகாமைத்துவமும் கரையோர வளங்களின் நிலைபேறான தன்மைக்கு முக்கியமானதாக இருந்தது.

விசேடமாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் நோக்கங்கள் வருமாறு;

  • கரையோர சூழலியலின் நிலையை மேம்படுத்துதல்
  • கரையோரத்தை அபிவிருத்திசெய்தல் மற்றும் முகாமைப்படுத்துதல்
  • கரையோரத்தில் வாழ்கின்ற சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
  • கரையோர வளங்களை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார அபிவிருத்தியை வசதிப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல்

வெளியீடுகள்

  • கரையோர வளங்களுக்காக பெறுமதி கூட்டல்
  • சூழல் நேயம் கொண்ட அபிவிருத்திகள்
  • தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை அதிகரித்தல்
  • கரையோர சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்தல்
  • கரையோர குடியிருப்புகளில் அதிகரிக்கப்பட்ட உற்பத்தித்திறன்
  • கரையோர குடியிருப்பாளர்களின் அனர்த்த அழுத்தங்களைத் தணித்தல்
  • கரையோர உட்கட்டமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் கரையோர சமூகங்களின் இடரைக் குறைத்தல்