Sinhala (Sri Lanka)English (United Kingdom)

மாதுகங்க சுற்றாடல் நிலையம்

மாதுகங்க சுற்றாடல் நிலையம்

இது கொழும்பிலிருந்து 98km தூரத்தில் தெற்குக் கடற்கரையோரத்தில் காணப்படும் இயற்கை அன்னையின் மிக இரம்மியமான உற்பத்திகளுள் ஒன்றாகும். மாதுகங்க ஆறாக குறிப்பிடப்பட்டிருப்பினும் புவியியல் ரீதியாக அது முகத்துவார கடனீரேரியாகும். இது வருடம் முழுவதும் நீரால் சூழப்பட்ட 15 'மெய்யான தீவுகளால்' (கொத்துவ, திக்துவ, மாதுவ, மெமதுவ, ஹொன்துவ, திமிதுவ, எரவனதுவ, நைதுவ, முவன்துவ, மெரலதுவ, கல்மன்துவ, கடுதுவ, மடதுவ, கோனதுவ, தினியதுவ) அடையாளப்படுத்தப்படுவதோடு மாதுகங்க முறைமையுடன் இணைந்துள்ள அதிக எண்ணிக்கையான நீர்க் கால்வாய்களைக் கொண்டது.

சூழலியல்
மாதுகங்க இயற்கையான கண்டல் தாவரங்களைக் கொண்ட வளம் பொருந்திய இடமாகும். இக்கண்டல் தாவரங்கள், கொண்டுள்ள விசேட இசைவாக்கங்களின் காரணமாக உப்பு அல்லது உவர் நீரில் வளரக் கூடியவை. சிறிய மீன்கள், இறால் மற்றும் பிற விலங்குகளுக்கு வாழிடமாகவும் திகழ்வதால் இக்கண்டல் தாவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தாவர இனங்கள்
எவ்வித தாக்கத்திற்கும் உட்படாத தாவர இனங்களைக் கொண்டுள்ளமை மாதுகங்கவின் சிறப்பம்சமாகும். மாதுகங்கவில் மொத்தமாக 14 வேறுபட்ட கண்டல் தாவர இனங்களும் 302 வெவ்வேறு மரஞ்செடி இனங்களும் காணப்படுகின்றன. மாதுகங்கவைச் சூழவுள்ள சில பிரதேசங்களில் இலங்கைக்கே உரித்தான உள்நாட்டு இனமான அரியவகை (ரத்மில்லா Lumnitze ralitttorea) இனத் தாவரம் காணப்படுகின்றது.

விலங்கினங்கள்
மாதுகங்க விலங்குகளையும் விசேடமாக பறவைகளையும் அவதானிக்கக் கூடிய வியத்தகு பிரதேசமாகும். இவ் அவதானிப்புக்கான தகுந்த நேரம் சூரிய உதயத்துக்கு சற்று பின்னர் அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு சற்று முன்னருமாகும். பறவைகளின் கணக்கிடலின் போது மொத்தமாக 111 பறவையினங்கள் கண்டறியப்பட்டன. பறவைகள் தவிர மீன், ஈரூடகவாழிகள், ஊர்வன, முலையூட்டிகள் போன்றவற்றின் பல்வேறு இனங்களும் காணப்படுகின்றன.

வசதிகள்:

தங்குமிடம்

நிலையத்திற்குள்ளேயே உணவருந்துதல்

கருத்தரங்கு வசதிகள்

பலதரப்பட்ட ஆசன வசதிகளுடன் கூடிய எமது கருத்தரங்கு மண்டபத்தை பல்வேறுபட்ட வைபவங்களுக்கு பயன்படுத்தலாம்.

வைபவம்

கொள்ளளவு

வகுப்பறை

50

திறந்த வெளி ஆசன ஒழுங்குகள்

25

பதிவுகளுக்கு:

பிரிவு

(ஒரு நாளுக்கு)

அறைகள்

ரூபா:

மண்டபம்

ரூபா:

படகுச் சவாரி

ரூபா:

A/C

A/C இன்றியவை

CCD உத்தியோகத்தர்கள்

 

 

 

 

பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர்கள்

 

 

 

 

ஏனைய அரசாங்க/தனியார் துறையினர்

 

 

 

 

கல்வித் துறையினர் (பாடசாலை/பல்கலைக்கழகம்)

 

 

 

 

பொறுப்பதிகாரி: திரு. நளின் பிரசன்ன டி சில்வா
தபால் முகவரி: மாதுகங்க சுற்றாடல் நிலையம்,
முத்தெட்டுவ மீன்பிடி குடியிருப்பு,
கரந்தெனிய, இலங்கை.
நேரில் விஜயம் செய்வதற்கான முகவரி: மாதுகங்க சுற்றாடல் நிலையம்,
முத்தெட்டுவ மீன்பிடி குடியிருப்பு,
கரந்தெனிய.
தொடர்பு இல: 071 4475958


 

 புதன்கிழமை, 27 பெப்ரவரி 2019 11:34 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

எமது சேவைகள்


கடல் அரிப்பு

இயற்கை 

நீர் 

அறிவு

சட்ட ஒழுங்குகள் 

பொருளாதாரம் 

பொறியியல் 

அனர்த்தங்கள் 
 

முக்கிய தளங்கள்

கரையோர பிரதேசங்கள்

 
 

கரையோர நிலையங்கள்

முக்கிய தளங்கள்

எழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது
 
இறுதியாக : 22 ஆகஸ்ட் 2019