Sinhala (Sri Lanka)English (United Kingdom)

கரையோரச் சுற்றாடலியலைப் பேணிக்காத்தல்

“சுனாமிக்குப் பிந்திய இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பங்குபற்றுதலுடன் கூடிய கரையோர வலய பேணிப்பாதுகாப்பு மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய முகாமைத்துவக் கருத்திட்டமானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோரச் சுற்றாடல் முறைமையை மீளப் பேணிப் பாதுகாப்பதற்கும் நீடித்து நிலைக்கக்கூடிய முகாமைத்துவம் ஊடாக அவைகளின் நீண்ட இருப்பை உறுதிப்படுத்து வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிழக்குக் கரையோரமானது இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகூடிய தாக்கப்படுதிறன் கொண்டிருப்பதைக் கவனத்திற் கொண்டு விசேடமாக உலகளாவிய காலநிலை மாற்றங்களிலிருந்து ஏற்படும் வளிமண்டலவியல் அனர்த்தங்களால் தாக்கப்படக்கூடிய நிலைமையையும் கருத்திற் கொண்டு காலநிலை மாற்றத் தாக்கங்களுடன் ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் ஜனசமூகத்தை இயைபடையச் செய்வது மீதான ஊக்குவிப்புகளில் இது கவனம் செலுத்துவதுடன், நீடித்து நிலைக்கக்கூடிய வாழ்வாதாரத் தெரிவுகளின் ஆதரவு ஊடக ஜனசமூகத்தின் ஈடுகொடுக்கும் சக்தியைக் கட்டியெழுப்புவதுடன், பங்குபற்றுதலுடன் கூடிய அனர்த்த இடர்குறைப்பு ஏற்பாடுகளை  அமுல்ப்படுத்துவதுமாகும். இக்கருத்திட்டமானது இலங்கையின் மொத்த 1600 கி.மீ நீளமான கரையோரத்தின் கிட்டத்தட்ட 1/4 பகுதியாகிய கிழக்கு மாகாணத்தின் கரையோர மாவட்டங்களான அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை கரையோரப் பகுதிகளை உள்ளடக்குகின்றது. ஆரம்ப கருத்திட்டக் காலப்பகுதி 6 வருடங்களாக 2009 செப்ரெம்பர் 30இல் ஆரம்பமாகி 2015 செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை உள்ளது. 



வெள்ளிக்கிழமை, 17 ஜூலை 2015 05:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

எமது சேவைகள்


கடல் அரிப்பு

இயற்கை 

நீர் 

அறிவு

சட்ட ஒழுங்குகள் 

பொருளாதாரம் 

பொறியியல் 

அனர்த்தங்கள் 
 

முக்கிய தளங்கள்

கரையோர பிரதேசங்கள்

 
 

கரையோர நிலையங்கள்

முக்கிய தளங்கள்

எழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது
 
இறுதியாக : 30 ஆகஸ்ட் 2017