Sinhala (Sri Lanka)English (United Kingdom)

காலி நகரத்தின் கரையோரப் பகுதி அபிவிருத்தி

கரையோரங்களை ஸ்திரப்படுத்தி விருத்தி செய்வதுடன் கரையோர வளங்களுக்கு பெறுமதி சேர்த்து கரையோர முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பங்களையும் உள்ளுரு; சனசமூகங்களுக்கு பொருளாதார ஈட்டங்களையும் ஏற்படுத்தும் அளவில் செயற்பாட்டு வடிவிலான அணுகுமுறைகள் மீதான முனைப்புக்களை கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் எடுத்துள்ளது. தற்போதைய கடல் அபிவிருத்தி அடிப்படையிலான பொருளாதார அணுகுமுறையில் காலி கடல் நகரத்தின் கரையோரப் பிரதேசங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆகவே தான் காலிக் கரையோரப் பிரதேசங்கள் அதிகரித்த உட்கட்டமைப்புக்களுடனும் தரைத்தோற்றம், கடல் தோற்றம் போன்றன ஓய்வுநேர பொழுதுபோக்கிற்காக உல்லாசப்பயணிகளைக் கவரும் விதத்திலும் கடல் அரிப்பு மற்றும் அபாய இடர்களை குறைக்கும் விதத்திலும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. 

காலி நகரத்தின் கரையோர முகாமைத்துவத் திட்டத்தில் கரையோர ஒவ்வொரு துண்டுகளினதும் இயலுமைகள் இனங்காணப்படுவதுடன் அதன் பிரகாரம் செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கரையோரங்கள், கடற்கரைகள், கடற்கரைக்குக் கிட்டிய இடங்கள், மற்றும் கடற்கரைக் காணிகள் உத்தேச செயற்பாடுகளுக்குப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப் படுகின்றன. நகரக் கரையோரமானது 3 வலயங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதுடன் 3 கட்டங்களாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்படுகின்றது.  

“கடல் நடை”  -  கட்டம் 1

பலடக்ஷ மாவத்தை, ரத்கமவெல்ல, மரின்றைவ், கடற்படை முகாம். 

கட்டம் 1 ஆனது குறிப்பாக ரூபா 72 மில்லியன்கள் செலவில் பூர்த்தி செய்யப்படுகின்றது. 

“கடற்கரைச் சவாரி”  -  கட்டம் 2

மகாமோதரை, கலுவெல்ல, கில்ரொப், வண்ணாத்திப்பூச்சிப் பாலம் 

இரண்டாம் கட்டத்திற்கான விரிவான வடிவமைப்பு மற்றும் மதிப்பீடுகள் பூர்த்தி அடைந்துள்ளதுடன் இலங்கை கடற்படையின் உதவியுடன் கட்டட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

“நெடுஞ்சாலை இறக்கம்” -  கட்டம் 3

துறைமுக நுழைவாயில், தேவத்தை, றம்மசாலை 

கட்டம் 3 துறைமுக அபிவிருத்தி கருத்திட்டத்துடன் இணைக்கப்படுகின்றது. 

சேர்க்கப்பட்டுள்ள ஏனைய அம்சங்களானவை: 

  • ஸ்திரமான கடற்கரைகள் 
  • கடலரிப்புக்கான கரையோரப் பாதுகாப்புக்கள் 
  • பச்சைத் தரையமைப்பு மற்றும் வேறுபட்ட கடலமைப்புக்கள் 
  • மனித சாதகமான சமுத்திர சுற்றாடல்கள். 
  • பாதசாரிகள் மற்றும் சைக்கிள் சவாரி செய்வோரை இணைத்தல். 
  • சமுத்திர நடைத் தட்டுக்கள். 
  • சமுத்திரத் தடாகங்கள். 
  • செயற்பாட்டுக்கான படிநிலையான தட்டுக்கள். 
  • குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள்.
  • கடற்கரை கைப்பந்து மற்றும் விளையாட்டு இடங்கள். 
  • குன்றுத் தோட்டங்கள்.
  • கடற்கரைத் தளபாடங்கள் மற்றும் ஓய்வுநேரம் மற்றும் பொழுது போக்குக்கான புகலிடங்கள்.
  • பறக்கும் சமுத்திரக் கலையரங்கம். 
  • சுற்றாடல் மற்றும் திறந்த கடல் படகுச் சவாரிக்கான நங்கூரங்கள். 
  • ஓய்வுநேர மீன்பிடிப்பிடங்கள். 
  • பட இடங்கள். 
  • காட்சி ஜன்னல்கள் மற்றும் பார்க்கும் தட்டுக்கள். 
  • சுற்றுலா இறக்கங்கள்.
  • சமுத்திர கடைத் தொகுதிகள். 
  • வாகனக் கடைத் திடல்கள். 
  • உணவுக் கடைகள் மற்றும் முன்திறக்கும் சிறுகடைகள். 
  • பறக்கும் சமுத்திர உணவுத்தட்டு. 
  • குளியலறைகள் மற்றும் பொதுப்பாவனை இடங்கள். 
  • வாகனத் தரிப்பிடம். 
  • தகவல் நிலையங்கள். 
  • பாதுகாப்பு, உயிர்காப்பு மற்றும் காப்புக்கள். 



வெள்ளிக்கிழமை, 17 ஜூலை 2015 04:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

எமது சேவைகள்


கடல் அரிப்பு

இயற்கை 

நீர் 

அறிவு

சட்ட ஒழுங்குகள் 

பொருளாதாரம் 

பொறியியல் 

அனர்த்தங்கள் 
 

முக்கிய தளங்கள்

கரையோர பிரதேசங்கள்

 
 

கரையோர நிலையங்கள்

முக்கிய தளங்கள்

எழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது
 
இறுதியாக : 06 நவம்பர் 2017